ரத்தம் கசிந்து நொறுங்கிய மார்பு.. 20அடியில் இருந்து விழுந்து துடித்து பலியான மாஸ்டர்..கதறிய படக்குழு
கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2 படத்தை PS மித்ரன் இயக்கி வருகிறார்... மிகப் பெரிய பொருட் செலவில் தயாராகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த நிலையில் சர்தார்-2 படப்பிடிப்பின்போது, எந்த வித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்... 35 வருடம் திரை அனுபவம் கொண்ட இவர், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பணியாற்றியுள்ளார்...
நேற்று மாலை 5 மணியளவில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இந்த கோர விபத்தனது நடந்திருக்கிறது. பலத்த காயமடைந்த ஏழுமலை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்... மேலிருந்து கீழே விழுந்ததில், மார்பு பகுதியில் காயமடைந்து நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்... இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படப்பிடிப்பின்போதும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.