"மாதம் தோறும் ரூ.4000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" - இமயம் அணியின் தேர்தல் வாக்குறுதி வெளியீடு

இமயம் அணியின் தேர்தல் வாக்குறுதி வெளியீடு "60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பேருந்துகளில் இலவச பயணம்"

Update: 2022-02-21 04:28 GMT
இயக்குநர் சங்க தேர்தல் தொடர்பான வாக்குறுதிகளை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார். இயக்குநர் சங்க தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, இயக்குநர் பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. அப்போது, அணியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய பாக்யராஜ், தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில், சங்கத்தில் 60 வயதுக்கும் மேல் உள்ள உறுப்பினர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார். மேலும், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மாதம் நான்காயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்