Mr & Mrs.. ராபர்ட் மாஸ்டருடன் திருமணமா? - வனிதா வெளியிட்ட எல்லாரும் எதிர்பார்த்த அறிவிப்பு

Update: 2024-10-05 13:22 GMT

திருமண அறிவிப்பு போன்ற புகைப்படத்தை வெளியிட்டு நடிகை வனிதா சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அது புது படத்திற்கான அப்டேட் என அவரே அறிவித்துள்ளார். அண்மையில், சேவ் தி டேட் என குறிப்பிட்டு நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனைக் கண்ட பலர், வனிதாவிற்கு மீண்டும் திருமணமா என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் என பெயரிடப்பட்ட படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை ஜோவிகா தயாரித்துள்ள நிலையில், வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்