"ருத்ர தாண்டவம்" திரைப்படம் - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் மறுத்துள்ளது.

Update: 2021-10-01 03:25 GMT
ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் மறுத்துள்ளது. இன்று வெளிவர உள்ள ருத்ர தாண்டவம் படத்தின், டிரைலர் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த படம் கிறிஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில்  இருப்பதாகவும், படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி சிறுபான்மை மக்கள் நல கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிபதி பிரபாகரன் முன் விசாரணைக்கு வந்த நிலையில், முழு படத்தையும் பார்க்காமல் யூகத்தின் அடிப்படையில், கடைசி நேரத்தில் இந்த மனு தாக்கல் செய்யபட்டுள்ளதால், தற்போது படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்