"திரையரங்கு உரிமையாளர்கள் சங்க முடிவு அபாயகரமானது" - பாரதிராஜா

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் முடிவு அபாயகரமானது என்று இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-30 05:48 GMT
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் முடிவு அபாயகரமானது என்று இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசித்து முடிவு எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவைகளையும் மீறி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டால், மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவார்கள் என்று பாரதிராஜா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்