நீங்கள் தேடியது "Supreme Court"
7 Feb 2020 2:02 AM IST
நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு
நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தொடர்பான வழக்கில் மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
4 Feb 2020 10:18 PM IST
(04/02/2020) ஆயுத எழுத்து : 11 எம்.எல்.ஏ வழக்கு - யாருக்கு நெருக்கடி?
சிறப்பு விருந்தினர்களாக : லட்சுமணன், பத்திரிகையாளர் //கோவை சத்யன், அதிமுக // செல்வ பெருந்தகை, காங்கிரஸ் // தமிழ்மணி, வழக்கறிஞர்
3 Feb 2020 4:57 PM IST
சபரிமலை விவகாரம் தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் விசாரணை ஒத்திவைப்பு
சபரிமலை விவகாரம் தொடர்பான மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
1 Feb 2020 6:49 PM IST
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு பிப். 4ம் தேதி விசாரணை - உச்சநீதிமன்றம்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு வரும் 4 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
28 Jan 2020 9:17 AM IST
நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் மனு தாக்கல் : அவசர வழக்காக உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
27 Jan 2020 4:32 PM IST
"நீட் தேர்வு கட்டாயம்" - உச்ச நீதிமன்றம் உறுதி
மருத்துவ படிப்புக்கு நீட் கட்டாயம் என்ற முடிவில் இருந்து பின் வாங்கப்போவதில்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
27 Jan 2020 3:42 PM IST
அரசியல் படுகொலைகள் தொடர்பான வழக்கு - மேற்குவங்க அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
அரசியல் படுகொலைகள் தொடர்பாக அம்மாநில பாஜக தலைவர் தாக்கல் செய்த பொதுநல மனு குறித்து பதிலளிக்க மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
25 Jan 2020 2:53 PM IST
"நிர்பயா குற்றவாளிகள் மனு தள்ளுபடி" - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு
திகார் சிறை அதிகாரிகளுக்கு எதிராக நிர்பயா குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
23 Jan 2020 6:03 PM IST
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகளை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா அல்லது வேண்டாமா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
17 Jan 2020 1:09 AM IST
"வட்டியுடன் ரூ. 1.47 லட்சம் கோடி செலுத்த வேண்டும்" - தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு
மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை, ஒரு வாரத்திற்குள் வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
15 Jan 2020 9:11 PM IST
"தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சி" - நிர்பயா தாயார் ஆஷா தேவி வேதனை
தமது மகளை கொலை செய்த குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சிப்பது அரசு நிர்வாகம் கண்பார்வையற்றதாய் இருப்பதையே காட்டுவதாக, நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்
15 Jan 2020 9:08 PM IST
நிர்பயா பாலியல் கொலை வழக்கு : தூக்கை ரத்து செய்ய முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்
நிர்பயா பாலியல் கொலை வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கை ரத்து செய்ய முடியாது என, டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.