"வட்டியுடன் ரூ. 1.47 லட்சம் கோடி செலுத்த வேண்டும்" - தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு

மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை, ஒரு வாரத்திற்குள் வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
வட்டியுடன் ரூ. 1.47 லட்சம் கோடி செலுத்த வேண்டும் - தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு
x
ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட பல்வேறு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், பயன்படுத்தும், அலைக்கற்றை அளவிற்கு ஏற்ப உரிமம் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த அலைக்கற்றையை பயன்படுத்தி, மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாயும், இந்த கணக்கில் சேர்க்கப்பட்டு, அரசால் வசூலிக்கப்படும் என்பதால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மொத்தமாக ஒரு லட்சம்  கோடி ரூபாய் அளவிற்கு, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியிருந்தது. இதை எதிர்த்து, தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தொகையினை செலுத்த வேண்டும் என்பதுடன், இது தொடர்பாக புதிய வழக்குகள் தாக்கல் செய்ய கூடாது என கூறி தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததால்,15 தொலைதொடர்பு நிறுவனங்களும், வட்டியுடன், சேர்த்து 1 புள்ளி 47 லட்சம் கோடி ரூபாயை செலுத்த வேண்டி உள்ளது. இதில் தற்பொழுது செயல்பாட்டில் இருக்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு செலுத்த வேண்டி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்