இந்தியா - ஆஸ்திரேலியா இடையே கடைசி டெஸ்ட் போட்டி - டாஸ் போடுகிறார் பிரதமர்
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்குகிறது.
- இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
- இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.
- இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
- முதல் நாள் ஆட்டத்தை பிரதமர் மோடியும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பானிஸும் நேரில் பார்க்க உள்ளனர்.
- தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- கடைசி போட்டியில் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்க உள்ளது.