பிரசாரத்தில் சொன்னதை அதிபரானதும் காற்றில் பறக்க விட்ட டிரம்ப்? - அதிர்ச்சியில் அமெரிக்கர்கள்

Update: 2024-12-29 09:09 GMT

H-1B விசா விவகாரத்தில் தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்கவுள்ள டிரம்ப் கருத்து தெரிவித்தது, அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கர்களுக்கே வேலையில் முன்னுரிமை என தேர்தலின் போது தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட டொனால்ட் டிரம்ப், H-1B விசா திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், எலான் மஸ்க், விவேக் ராமசுவாமி உள்ளிட்ட தொழிலதிபர்கள் H-1B விசா திட்டத்திற்கு ஆதரவளித்த நிலையில், அவர்களின் கருத்தை ஆமோதித்து, H-1B விசாவுக்கு ஆதரவளித்து டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் டிரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் குடியரசு கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்