உத்தரபிரதேசம் மாநிலம் மடன்பூர் போலீஸ் ஸ்டேஷன் INCHARGE-ஆ வினோத் குமார் சிங் பதவி வகிச்சிட்டு வந்துருக்காரு. ஆறு மாசம் வேலை பார்த்துட்டு வந்த நேரத்துல, அரசு அவருக்கு TRANSFER கொடுத்திருக்கு. இந்த தகவல் அறிஞ்ச உள்ளூர் மக்கள் அவருக்கு மாலை போட்டு, டிரம்ஸ் வாசிச்சப்படி, குதிரைகள் புடைசூழ, ஊர்வலமா அழைச்சிட்டு போனாங்க. ஒருசிலர் வினோத் போகுறத நினைச்சி எமோஷனல் ஆயிட்டாங்க.. ஒரு போலீஸ் ஆபிசரை மக்கள் உற்சாகத்தோட வழியனுப்பி வச்ச வீடியோ வைரலா சுத்திட்டு இருக்கு.