செங்கடல் தாக்குதலுக்கு பதிலடி... ஏமனில் வான்வழியாக அடிக்கும் அமெரிக்கா

Update: 2024-02-25 10:07 GMT

செங்கடல் தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் செயல்பட்டுவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளன. ஏமனில் 18க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுதக்கிடங்குகள் உள்ளிட்ட இலக்குகளை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்