"பிள்ளைகளுக்கு சொத்தை எழுதி கொடுக்கும்போது" பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணி....!நீதிமன்றம் தீர்ப்பு

வாரிசுகள் தங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்காவிட்டால், செட்டில்மெண்ட் பத்திரத்தை பெற்றோர் ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

Update: 2022-07-06 08:09 GMT

"பிள்ளைகளுக்கு சொத்தை எழுதி கொடுக்கும்போது"; பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணி.....! நீதிமன்றம் தீர்ப்பு

வாரிசுகள் தங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்காவிட்டால், செட்டில்மெண்ட் பத்திரத்தை பெற்றோர் ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னம்மாள் என்பவர் தனக்கு சொந்தமான சொத்தை மகன் மரிய பிரகாசத்திற்கு செட்டில்மெண்டாக எழுதிக் கொடுத்துள்ளார்.

இதன்பின்னர், சின்னம்மாளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் அந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கு விசாரணைக்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாரிசுகளுக்கு சொத்தை எழுதிக் கொடுக்கும்போது, தங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தால் மட்டுமே, அதை ரத்து செய்ய முடியும் என வாதிட்டார்.

இதனை ஏற்ற நீதிபதி, அவ்வாறு ஏதும் செட்டில்மெண்ட் பத்திரத்தில் இல்லாத நிலையில் பத்திரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை தவறு என கூறி, அந்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், சின்னம்மாளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 5000 ரூபாய் வழங்க மரிய பிரகாசத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை நாடும்படி சின்னம்மாளுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்