கொளுத்தி எடுக்கும் வெயில்... மழைக்கு வாய்ப்பு உண்டா..? - வானிலை மையம் கொடுத்த அலர்ட்
அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்று முதல் 11-ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதுமில்லை என்றும், அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என தெரிவித்துள்ளது.
இன்று அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 3 முதல் 5 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2 முதல் 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.