வேறு நபருடன் அசிங்கம் செய்ய சொன்ன கணவன் - உடைந்து போய் மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்

Update: 2024-11-23 14:11 GMT

கொடைக்கானலைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த உதயகுமார் என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்று சில மாதங்களிலேயே புது பெண், திருப்பூர் எஸ்.பி அலுவலகத்தில் கணவர் வீட்டார் மீது புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த பெண், கணவர் உதயகுமாரின் குடும்பத்தை விட, தான் ஏழை என்பதால், அவர்களுக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் அதிபர் வேலுச்சாமி என்பவர் உடன் பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு வழங்குமாறு வற்புறுத்தியதாக கூறியுள்ளார். அதற்கு இனங்க மறுத்ததால் தன்னை காரில் கடத்தி தொழிலதிபர் கெஸ்ட் ஹவுஸில் கட்டாயப்படுத்தி பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ள மாமியார் சுமதி முயற்சித்ததாகவும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது கணவரும் மற்றும் மாமனார் ஞானசேகரனிடமும் தெரிவித்த போது, அவர்களும் இவ்விவகாரத்தில் உடந்தையாக செயல்பட்டதாக கூறியுள்ளார். இது குறித்து உடுமலைப்பேட்டை காவல் நிலையம் மற்றும் துணை மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்