விநாயகர் சதுர்த்திக்கு 2.5 கோடியில் பண அலங்காரம் - வைரலாகும் வீடியோ காட்சிகள்

Update: 2023-09-19 07:18 GMT

பணத்தையே அலங்கார பொருளாக மாற்றி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய நிகழ்வு, பெங்களூருவின் ஜேபி நகர் பகுதியில் அரங்கேறியுள்ளது..பெங்களூர் ஜே.பி. நகர் பகுதியில் உள்ள சத்ய கணபதி கோயிலில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை வெகு விமரிசையாக கொண்டாடும் விதமாக, அப்பகுதியை சேர்ந்த மக்கள், இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் 10, 20, 50 முதல் 500 ரூபாய் வரையிலான நோட்டுகளை கொண்டு நேர்த்தியாக அலங்கரித்திருந்த விதம் காண்போரை வெகுவாக கவர்ந்தது. இந்த அலங்காரத்தை, 150 பேர் இணைந்து செய்துள்ளனர். குறிப்பாக, விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, லட்டு போன்றவையும் நாணயங்களாலே வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்