கப்பை கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் யுவராஜ்-சத்யா தம்பதி, தங்கள் மகன்களான 9 வயது ஹரி பிரசாத், மற்றும் 7 வயது பிரகதீஷ் ஆகியோருடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த நிலையில், பவுர்ணமியை ஒட்டி யுவராஜ் குடும்பத்துடன் அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று வழிபட்டு விட்டு இரவு 11 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தனர்... வரும் வழியில் அவர்களின் உறவினர்கள் 5 பேரை சந்தித்த நிலையில் அவர்களையும் ஏற்றிக் கொண்டு செஞ்சி அடுத்த புலிவந்தி பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலுக்கு மொத்தம் 9 பேர் ஒரே ஆட்டோவில் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு கப்பை கிராமத்திற்கு நள்ளிரவு 2 மணியளவில் திரும்பியுள்ளனர்... அப்போது கப்பை அருகே சாலை வளைவில் திரும்பும் போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கட்டையில் மோதி அருகில் இருந்த சுமார் 35 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் மூழ்கியது. யுவராஜ் தலையில் பலத்த காயங்களுடனும் மேலும் 7 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், ஹரி பிரசாத்தும், பிரகதீஷும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்... அவர்களின் உடல்கள் 2 மணி நேரத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டது... இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...