3 வயது குழந்தையை தோளில் சுமந்த இன்ஸ்பெக்டர் - "சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு"

Update: 2024-12-04 06:50 GMT

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை இன்ஸ்பெக்டர் ஒருவர் தோளில் சுமந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அரகண்டநல்லூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் ஈடுபட்டிருந்த அரகண்டநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருபரன், மூன்று வயது பெண் குழந்தையை மீட்டார். பின்னர் அந்த குழந்தையை தோளில் சுமந்து தண்ணீர் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்