"எங்களுக்கு வாழ்வாதாரமே இல்ல"..விமானநிலைய விரிவாக்கம் நிலம் கொடுத்தவர்கள் பரபரப்பு பேட்டி
- சின்னஉடைப்பு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மக்கள், மீண்டும் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். மதுரை விமானநிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மிகக் குறைவாகவே இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், மறு குடியமர்வு வசதிகளும் செய்து தரப்படவில்லை எனவும் குற்றம்சாட்டிய அவர்கள் நிலம் கையகப்படுத்துதல், மறுகுடியமர்வு செய்தல் தொடர்பான விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறினார்கள். தங்களுக்கு 2013 சட்டத்தின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வீடு வழங்கியவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை வீடுகளை காலி செய்ய மாட்டோம் என சின்னஉடைப்பு கிராமமக்கள் அறிவித்துள்ளனர்.