விழுப்புரம் அருகே அமைச்சர் பொன்முடி கலந்து கொண்ட கிராம சபை கூட்டத்தில்..மண்ணெண்ணை ஊற்றிக் கொண்ட தொழிலாளி

Update: 2024-11-23 13:01 GMT

விழுப்புரம் மாவட்டம், செம்மார் கிராமத்தில்,மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசி முடித்தவுடன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது,கூலி தொழிலாளி வேல்முருகன் என்பவர், அமைச்சர் முன்பு வந்து, பையில் வைத்திருந்த மண்ணெண்னைக் கேனை எடுத்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் தன் தலையில் ஊற்றிக் கொண்டார். அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை தடுத்து அவர் தலையில் தண்ணீரை ஊற்றினர். இது குறித்து வேல்முருகன் கூறுகையில், தனக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், அரசின் இலவச வீடு வழங்க உத்தரவிட்டும், கருவேப்பிலை பாளையம் கிராம ஊராட்சி செயலாளர் ராஜசேகர் என்பவர் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தனக்கு வீடு வழங்குவதை தடுத்து வருவதாக குற்றம் சாட்டி கதறி அழுதார். காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்