வேலூர் பாஜக நிர்வாகி கொலை... கலெக்டர் போட்ட உத்தரவு | Vellore

Update: 2025-01-09 09:54 GMT

வேலூரை சேர்ந்த பாஜக நிர்வாகி விட்டல் குமார் கொலை வழக்கில் சிறையில் உள்ள 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நாகல் கிராமத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி விட்டல் குமார். கடந்த 16-ம் தேதி சாலையோரம் விபத்தில் சிக்கியது போல் மீட்கப்பட்ட நிலையில் விசாரணையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் பாலாசேட், அவரது மகன் தரணிகுமார், கூட்டாளிகள் கமலதாசன், சந்தோஷ் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 4 பேரை மீதும் குண்டர் சட்டத்தில் அடைக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்