இது தொடர்பாக வேலூர் மாவட்ட எஸ்பி மதிவாணனிடம், ரிஷிகுமார் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தொழிலதிபர்கள் பிரம்மானந்தம் தண்டா மற்றும் சேகர் ரெட்டிக்கு சொந்தமான ஜோதிர் மை எஸ்டேட் சுமார் 7 ஏக்கரில் உள்ளதாக கூறியுள்ளார். இந்த இடத்தில் பார்க்கிங் நடத்தி வருவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பார்க்கிங் நடத்திவரும் இடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாக, ரிஷி குமார் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே, நான் மிரட்டுவதாக சொல்வது தவறு என்று கே.சி.வீரமணி மறுப்பு தெரிவித்துள்ளார். செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது உண்மைதான், அப்போது நிலத்தின் உரிமையாளரான பிரம்மானந்த தண்டா என்னுடன் இருந்ததாக கூறினார். பிரம்மானந்த தண்டா என்னுடைய நீண்ட கால தொழில் பார்ட்னர் என்றும்,அவரும் ரிஷி குமாரிடம் பேசியதாக தெரிவித்தார்.
ரிஷி குமார் கட்சி தொடர்பாக என்னுடன் அடிக்கடி பேசுபவர் தான் என்றும்,ஆனால் எதற்காக இந்த மாதிரியான புகார் ஒன்றை தெரிவிக்கிறார் என்று ரியவில்லை என்று கே.சி.வீரமணி விளக்கம் அளித்துள்ளார்.