மதுரை வைகையாற்றில் திறந்துவிடப்பட்ட நீரில் சிறுவர்கள் குதித்து நீச்சலடித்து விளையாடி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பூர்வீக பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து நேற்று முதல் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மதுரை மாநகர் வைகையாற்று பகுதி வழியாக தண்ணீர் செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தண்ணீரை பார்த்த ஆனந்தத்தில் ஆபத்தை உணராத சிறுவர்கள் நீச்சலடித்து விளையாடி வருகின்றனர்.