காட்டுத்தீயால் 5 பேர் பலி - 1 லட்சம் பேர் இடம்பெயர்வு | USA | America | Thanthi TV

Update: 2025-01-10 03:56 GMT

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட தீ விபத்தால், இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த ஏழாம் தேதி முதல் எரிந்து வரும் காட்டுத்தீயால் அங்குள்ள ஆயிரக்கணக்கான வீடுகள், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், மரங்கள் ஆகியவை எரிந்து சாம்பலாகியுள்ளன. மேலும் அங்கிருந்த 12 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தீயில் கருகி அழிந்து விட்ட நிலையில், ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப் பட்டதாகவும், 5 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நீர்ப்பற்றாக்குறை காரணமாக தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்