திடீரென மேடையில் எமோஷனலான விஜய்..!
தொண்டர்கள் புடை சூழ, பிரமாண்ட மேடையில் சரியாக 4.01 மணிக்கு வருகைத் தந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, ஆரவாரத்துடன் வரவேற்பு அளிக்க....திடலில் அமைத்திருந்த ரேம்ப்-ல் நடந்து அரங்கை அதகளப்படுத்தினார்..
அதிலும் ரேம்ப்-ல் நடந்த விஜய் மீது தொண்டர்கள் கட்சிக்கொடி சால்வையை வீச, அதனை தோளில் அணிந்தபடியே சென்று தொண்டர்களை குஷிப்படுத்தினார்..
அப்படியே ரேம்பில் இருந்து ஓடி வந்த விஜய், மேடையில் நின்று ஆனந்த கண்ணீர் வடித்தது தொண்டர்களையும் எமோஷனலாக்கியது...
பின்னர், மேடையில் இருந்த சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், மாமன்னர்கள் உள்ளிட்டோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியது தனி கவனம் பெற்றது....
இதற்கிடையில், மேடையில் இருந்த தாஹியா என்ற பெண்மணி தனிக்கவனம் பெற, அவரின் பின்னணியும் சுவாரஸ்யமாக அமைந்தது..
கடந்த 2023ம் ஆண்டு வாரிசு படத்தை பார்த்து விட்டு, விஜய்க்கு ஆதரவாக பேசிய தாஹியா, அன்றிரவே அதுகுறித்து மன்னிப்பும் கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். இவ்விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், அப்பெண்மணி மிரட்டலுக்குள்ளானதாக பேசப்பட்டது..
இந்நிலையில், அன்று வீடியோ வெளியிட்ட அதே பெண்மணி தான் தற்போது தவெகவின் துணை கொள்கை பரப்பு செயலாளராக மேடையில் இடம்பெற்றுள்ளார்.
இவற்றையெல்லாம், விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ. சந்திரசேகரும், ஷோபாவும் முன் வரிசையில் அமர்ந்து பார்க்க, நடிகர் ஸ்ரீமன்னும் உடனிருந்தார்..
இந்நிலையில் தனது பேச்சை தொடங்குவதற்கு முன்னர், மேடையை விட்டு இறங்கிய விஜய், நேரடியாக சென்று தனது தாய், தந்தையரிடம் ஆசிர்வாதம் பெற்றார்...
5.30 மணிக்கு தொடங்கிய தன் உரையை... சரியாக 6.15 மணிக்கு 45 நிமிடத்தில் முடித்தார் விஜய்...
அரசியலில் முழுவீச்சில் களமிறங்கியுள்ள விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் உற்றுநோக்கப்படும் சூழலில், மாநாட்டில் நடந்த ஹைலைட் நிகழ்வுகளும் தனிகவனம் பெற்றுள்ளது...