2 கிட்னியும் இழந்த சிறுவன்...வாழும் ஒவ்வொரு நாளும் நரகம்...கணவரும் இறந்துட்டாரு.. போராடும் தாய் - "எதிரிக்கு கூட இந்நிலை வர கூடாது"

Update: 2024-01-23 07:37 GMT

திருச்சியில் 2 கிட்னியும் செயலிழந்த தனது 12 வயது மகனுக்கு, மருத்துவ உதவி வழங்க வேண்டும் என, சிறுவனின் தாயார் கோரிக்கை வைத்துள்ளார்.திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த அழகரை கிராமத்தை சேர்ந்தவர், வனஜா. கணவரை பிரிந்த இவர், ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 12 வயதில் ஹரீஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், ஹரீஸ்-க்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் காண்பித்தபோது, ஹரீஸ்-ன் இரண்டு கிட்னியும் பழுதாகியுள்ளது தெரியவந்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது மகனுடன் வந்த வனஜா, தனது மகனுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் சார்பில் தற்போதைக்கு, மருத்துவ செலவுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்