பூட்டிய வீட்டுக்குள் அழுகி கிடந்த கணவனின் சடலம்... கூடவே இருந்த மனைவி... அதிர்ந்த போலீசார்... ஷாக்கில் உறைந்த மக்கள்
திருப்பத்தூர் முஸ்லிம் நடுத்தெருவில் ஆதிரத்தினமூர்த்தி என்பவர், மனநலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக ரத்தினமூர்த்திக்கு உடல்நிலை சரியில்லாத சூழலில், அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. தகவலின் பேரில் வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்த போது, அழுகிய நிலையில் ரத்தினமூர்த்தியின் உடல் இருந்துள்ளது. விசாரணையில் உடல்நிலை சரியில்லாமல் ரத்தினமூர்த்தி உயிரிழந்ததும், அதுதெரியாமல் 3 நாட்களாக அவரது மனைவி வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து சடலத்தை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.