தாடி வைத்த இஸ்லாமிய போலீஸ் டிஸ்மிஸ் ரத்து - ஐகோர்ட் மதுரை பெஞ்ச் அதிரடி
மதுரையைச் சேர்ந்த அப்துல் காதர் இப்ராஹிம் என்ற காவலர், பணியின் போது தாடி வைத்திருந்ததால், அவருக்கு பணி மற்றும் ஊதிய உயர்வு நிறுத்தி வைக்க பட்டது. பின்னர் இது குறித்து அவர் விடியோ வெளியிட்டதால், அன்றைய தமிழ்நாடு காவல் துறை
இயக்குனர் சைலேந்திர பாபு, இவரை காவல் பணியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த குற்றங்களுக்கு காவலருக்கு சிறிய தண்டனை ஏதாவது வழங்கலாம்
எனக் கூறி, அவரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சார்பில்
மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் மீதான விவகாரத்தில் மட்டும் உட்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.