பொங்கல் பரிசு ரூ.1,000... ஏன் வழங்கப்படவில்லை? அமைச்சர் விளக்கம்

Update: 2025-01-09 11:10 GMT

தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய தங்கம் தென்னரசு, பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிலுவையில் வைத்திருப்பதாக கூறியுள்ளார். மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் கேட்கப்பட்ட 37 ஆயிரம் கோடி ரூபாயில், 276 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இப்படி நிதி நெருக்கடியில் தமிழ்நாடு அரசு சிக்கி இருப்பதால்தான் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்