"ஏழு மாவட்ட மக்களின் கனவு திட்டம் என்னாச்சு? - வேதனையில் விவசாயிகள்"

Update: 2025-03-16 03:03 GMT

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் கண்துடைப்பான பட்ஜெட் என்று புதுக்கோட்டையில் இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜி.எஸ் தனபதி, தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஏழு மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமாக உள்ள காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாதது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளதாகவும், விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வருடம் தோறும் தாக்கல் செய்யும் சாதாரண பட்ஜெட் ஆகவே உள்ளதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்