சென்னை டூ நாகை மிதக்கவிட்ட கனமழை - ஒரே நாளில் இவ்வளவா?

Update: 2024-11-27 05:20 GMT

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நாகப்பட்டினத்தில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நாகையில் 16 சென்டி மீட்டரும், சென்னையை அடுத்த மணலியில் 13 சென்டிமீட்டரும் திருவாரூரில்12 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், மற்றும் சென்னை கத்திவாக்கத்தில் 11 சென்டி மீட்டரும், மாமல்லபுரத்தில்10 சென்டி மீட்டரும். காரைக்காலில் 9 சென்டிமீட்டரும் திருக்கழுக்குன்றம், மதுரை மற்றும் திண்டுக்கலில் 8 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் புழல் மற்றும் பெருங்குடியில் 7 சென்டிமீட்டரும் மீனம்பாக்கத்தில் 6 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்