வசந்த் அண்ட் கோ-வின் அதிரடி தள்ளுபடி - 123வது கிளை திறப்பு விழாவில் குவிந்த மக்கள்

Update: 2025-01-09 11:00 GMT

பிரபல வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனமான வசந்த் அண்ட் கோ-வின் 123வது கிளை திருவண்ணாமலையில் திறக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே புதிய கிளையை வசந்த் அண்ட் கோ, மேனேஜிங் பார்ட்னர் (MANAGING PARTNER) வினோத் வசந்தகுமார் திறந்து வைத்தார். தொடர்ந்து வினோத் வசந்தகுமார், மாநகராட்சி மேயர் நிர்மலா உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றினர். திறப்பு விழாவையொட்டி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான மக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்