கணவனுக்கு பிடித்த பொல்லா பேய்... நள்ளிரவு 1 மணிக்கு 8 துண்டாக காவு... ரத்தம் வழிய பெட்டிக்குள் மனைவி
காதல் கணவனுக்கு பிடித்த பொல்லா பேய்
நள்ளிரவு 1 மணிக்கு 8 துண்டாக காவு
ரத்தம் வழிய வழிய பெட்டிக்குள் மனைவி
`திருச்செந்தூர்’ பிளான்...தி.மலை க்ரைம்
காதல் மனைவியை 8 துண்டுகளாக வெட்டி கொலை செய்து உடலை காட்டுக்குள் வீசிய கொடூர சம்பவத்தில், கணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கோர கொலை சம்பவத்தின் பின்னணியை பார்க்கலாம் விரிவாக...
திருவண்ணாமலை மாவட்டம் பேய் கோபுரத் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபிநாத். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிய நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார்.
பின்னர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசுடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த சரண்யா என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் கோபிநாத்...
இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில், கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், தீபாவளிக்கு முன் தினம் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய போது, தாய் சரண்யா வீட்டில் இல்லை.
மேலும், பண்டிகை தினத்தன்று வாழ்த்துக் கூற சரண்யாவின் தாயார் சிவகாமி போன் செய்தும், அவர் எடுக்க வில்லை... பலமுறை தொடர்பு கொண்டும் மகளிடம் பேச முடியாததால், சந்தேகமடைந்த தாயார், திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில், தனது மகளை காணவில்லை எனப் புகாரளித்துள்ளார்.
மருமகன் கோபிநாத்திடம் மகள் குறித்து கேட்ட போதும் உரிய பதிலளிக்காமல் இருந்ததால், மருமகன் மீது சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரணையத் தொடங்கிய போது, கோபிநாத் தலைமறைவானது தெரியவந்தது, அவரை தேடி கண்டுபிடித்து தங்களது பாணியில் விசாரணையைத் தொடங்கினர் போலீசார்..
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...
பல இடங்களில் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் இருந்து வந்த கோபிநாத், கடன்காரர்களிடம் தனது மனைவி சரண்யாவை பதில் சொல்ல வைத்து வந்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் மனைவியின் நடத்தையிலும் கோபிநாத்-க்கு சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது...
இதனால் இருவருக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்த நிலையில், தீபாவளியன்று தகராறு முற்றியதாக தெரிகிறது.
இந்நிலையில் பண்டிகைத் தினத்தன்று நள்ளிரவு 1 மணியளவில் மனைவியை கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார் கோபிநாத்...
அதன் படி, தனது காதல் மனைவியை கொன்ற கோபிநாத், அவரை 8 துண்டுகளாக வெட்டி...உடலை மறைக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அதன் படி, துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனைவியின் உடலை சூட்கேசில் எடுத்துக் கொண்டு, தனது தாய் உதவியுடன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு திருச்செந்தூர் செல்வதாக கூறி, திருவண்ணாமலையை சேர்ந்த கார் ஓட்டுநருடன் பெங்களூர் புறப்பட்டுள்ளார்.
வழியில் டீக்கடையில் வண்டியை நிறுத்த சொன்ன கோபி, சூட்கேசில் வைத்திருந்த மனைவியின் உடலை, கிருஷ்ணகிரி அடுத்த மேலுமலை வனப்பகுதியில், சென்னை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்டில் வீசி விட்டு சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது..
பின்னர், மனைவியின் உடலை வீசிய வனப்பகுதிக்கு கோபிநாத்-ஐ அழைத்து சென்று உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், கொலை வழக்கில் தொடர்புள்ள மாமியார் சிவகாமி மற்றும் கார் ஓட்டுநர் விஜயராகவன் ஆகியோரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.