``ரோஷமில்ல; கோமா-ல இருந்தியா..'' ரோடு போடவந்த ஆபீசர்ஸ் - வறுத்தெடுத்த கவுன்சிலர் புருசர்

Update: 2024-11-09 13:47 GMT

திருப்பூரில், தன்னிடம் சொல்லாமல் சாலை பணிகளை தொடங்கியதாகக்கூறி, மாநகராட்சி அதிகாரிகளை திமுக பெண் கவுன்சிலரின் கணவர் தரக்குறைவாக பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாநகராட்சி 2ம் மண்டலத்திற்குட்பட்ட, 19வது வார்டு திமுக கவுன்சிலர் லதா என்பவரது கணவர் மோகன், சாலைப் பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு முறையாக தகவல் தெரிவித்துதான் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், கவுன்சிலரின் கணவர் அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டி, அவர்களை பணி செய்யவிடாமல் திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்