பேய் மழை பெய்தும் நிரம்பாத அணை... உயிர்ப்பிக்க வேண்டி ஊர்மக்கள் செய்த செயல்

Update: 2024-12-16 06:39 GMT

பேய் மழை பெய்தும் நிரம்பாத அணை... உயிர்ப்பிக்க வேண்டி ஊர்மக்கள் செய்த செயல்

திருப்பூர் மாவட்டம் வட்டமலை அணைக்கு நீர்வரத்து வேண்டி ஊர் மக்களும் விவசாயிகளும் பத்தாயிரத்தெட்டு அகல்விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீப வழிபாடு நடத்தி வியக்க வைத்தனர்.

6 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த அணை 25 ஆண்டுகள் கடந்து, கடந்த 2021ல், தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் தண்ணீர் வரத்தின்றி வறண்டு கிடக்கிறது. அதிகளவு மழை பெய்யும் போது மட்டுமே நீர்வரத்து வரும் நிலை உள்ளதால் இந்த அணையில் இந்த ஆண்டு நீர்வரத்து வேண்டி 6ஆம் ஆண்டாக இலுப்பை எண்ணெய் ஊற்றி அகல்விளக்கு ஏற்றி மக்கள் வழிபட்டனர்... ஆழ்துளை கிணற்றில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே செல்வதாகவும், விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலை நீடிப்பதால், அமராவதி ஆற்று பாதையில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு கால்வாய் வெட்டி வெறுமனே கிடக்கும் அணையை உயிர்ப்பிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்