"காச ரிட்டன் குடுங்க.." - அசிங்க அசிங்கமா பேசி அடித்து துரத்திய தியேட்டர் ஊழியர்கள்

Update: 2025-03-16 06:27 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள திரையரங்கிற்கு மதுபோதையில் வந்த இளைஞரை திரையரங்க ஊழியர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர்.

டிக்கெட் தொகையை திரும்பக் கேட்டு கஜேந்திரன் என்பவரும் அவரது நண்பர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. காயம் அடைந்த கஜேந்திரன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்