20 அடி ஆழ கிணற்றில் விழுந்த கார்..! நூலிழையில் தப்பிய ஓட்டுநர்.. வெளியான பயங்கர காட்சிகள்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே 20 அடி ஆழமுள்ள கிணற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானது. கதிரிமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜீவ் என்பவர், பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த கார் கே.பந்தாரப்பள்ளி பகுதியில் சென்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 20 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி காரையும்,காரை ஓட்டி வந்த ராஜிவையும் மீட்டனர்.