திடீர் பரபரப்பான திருச்செந்தூர் கடல்...போராட்டத்தில் குதித்த பெண்கள்

Update: 2024-12-10 14:36 GMT

#tiruchendur

திடீர் பரபரப்பான திருச்செந்தூர் கடல்...போராட்டத்தில் குதித்த பெண்கள்

திருச்செந்தூர் அருகே கடலில் தூண்டில் வளைவு முறையாக அமைத்து தர வலியுறுத்தி, 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள், பெண்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமலிநகர் கடற்கரை பகுதியில் 55 கோடி ரூபாய் மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. இது ஒருபுறம் மட்டும் அமைக்கப்பட்டுள்ளதால், படகை கடலுக்குள் செலுத்தி, மீண்டும் கரைக்கு கொண்டு வருவது சிரமமாக உள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே முழுமையாக தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி, கருப்பு கொடி ஏந்தி கடலில் இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்