திருச்செந்தூரில் கடலுக்குச் சென்ற 3 மீனவர்கள் மாயமானதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே அமலிநகரைச் சேர்ந்த ரமேஷ், அஜய், ரிஜெய்
ஆகியோர் பாய்மர படகில் கடலுக்கு சென்றுள்ளனர். மாலை வரை அவர்கள் 3 பேரும் வீடு திரும்பாத நிலையில் அமலிநகரை சேர்ந்த சக மீனவர்கள் 10 பைபர் படகுகள் மூலம் கடலுக்கு சென்று தேடி உள்ளனர். இரவு நேரமாகிவிட்டதாலும், மாயமான மீனவர்கள்கள் கிடைக்காததாலும், மீட்கச்சென்றவர்கள் கரை திரும்பினர்.