பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து PT Sir பாலியல் தொல்லை அளித்த விவகாரம்.. நெஞ்சுவலி என சாய்ந்த PT, HM
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் மாணவிகளுக்கு மது கொடுத்து உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், அவருக்கு உடந்தையாக இருந்ததாக தனியார் பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லி, பள்ளியின் செயலர் செய்யத் அஹமத் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இருவரும் தங்களுக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கும், பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கிடையே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.