சாப்பிடும்போது உணவில் நெளிந்த புழு, பூச்சிகள்.. முகத்தை சுளிக்க வைக்கும் சாப்பாடு

Update: 2024-11-12 02:24 GMT

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக விடுதி உணவில் புழு, பூச்சிகள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழக விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழு, பூச்சி, தட்டான் உள்ளிட்டவைகள் கிடந்ததை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாணவர்கள் புலம்பி வருகின்றனர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்