திருவாரூரில் மருத்துவமனைக்கு நேர்ந்த கதி.. மக்கள் அவதி

Update: 2024-11-08 11:26 GMT

கன மழை காரணமாக திருவாரூர், விஜயபுரத்தில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனை வளாகம் மற்றும் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய சாலை ஆகியவற்றில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக் கடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக மருத்துவமனைக்கு வெளி நோயாளிகள் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உள்நோயாளிகள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நகராட்சி ஊழியர்கள் மருத்துவமனை வளாகம் மற்றும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை.வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் வளாகத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்