முருகனை காண திருத்தணி வந்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் | Thirutani Murugan Temple
திருத்தணி முருகன் கோயிலில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் சாமி தரிசனம் செய்தார். கார்த்திகை முதல்நாள் மற்றும் கிருத்திகையையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதற்காக, தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அந்த வகையில், சிங்கப்பூர் உள்துறை அமைச்சரான சண்முகம், ஹெலிகாப்டர் மூலம் தனியார் கல்லூரி வளாகத்தில் இறங்கி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகன் கோயிலுக்கு வந்தார். முருகனை வழிபட்ட சிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்திற்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூ மாலை மற்றும் விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.