"அப்பனே முருகா..." - சட்டைபையில் கையை விட்டு மொத்தமாக அள்ளி உண்டியலில் போட்டு கதறும் பக்தர்

Update: 2024-12-20 04:43 GMT

உண்டியலில் எந்த பொருள் விழுந்தாலும், அது கோயிலுக்குதான் சொந்தம்...

இதுபோன்ற வசனங்களும், காட்சிகளும் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் பார்த்திருப்போம்...

இதுபோன்ற ஒரு நிகழ்வுதான் நிஜத்தில், திருப்போரூர் முருகன் கோயிலில் நடந்துள்ளது.

கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்ற போது, விலை உயர்ந்த செல்போன் ஒன்றும் கிடைத்துள்ளது.

இதன் பின்னணிதான் சினிமா காட்சியை நினைவூட்டியது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அம்பத்தூரை சேர்ந்த தினேஷ் என்ற பக்தர் முருகனை வழிபட்டுவிட்டு, சட்டைபையில் இருந்து காணிக்கை செலுத்தும்போது, தனது விலை உயர்ந்த செல்போனை உண்டியலில் தவற விட்டுள்ளார்

இந்நிலையில், கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி பற்றி தகவல் அறிந்து செல்போனை உரிமை கோருவதற்காக தினேஷ் வந்துள்ளார். ஆனால், உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது..... செல்போனைக் கொடுக்க முடியாது, வேண்டுமென்றால், அதில் உள்ள தரவுகளை மட்டும் பெற்றுக் கொள்ளலாம் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஏமாற்றம் அடைந்த தினேஷ் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றுள்ளார்.

ஏற்கனவே இந்துசமய அறநிலையத்துறையில் புகார் அளித்த நிலையில், செல்போன் கிடைக்கும் என்று நம்பிக்கையில் முருகனை தரிசனம் செய்ய வந்த தினேஷிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Tags:    

மேலும் செய்திகள்