திருச்செந்தூரில் விமரிசையாக நடைபெற்ற தெப்ப உற்சவம் - பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழாவை ஒட்டி, தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் எழுந்தருளி, தெப்பத்தில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.