பாகன் முன்... காதை பிடித்து... தலையை ஆட்டி... சொன்ன தெய்வானை - பக்தர்களை கலங்க வைக்கும் காட்சி!
கடந்த மாதம் தெய்வானை தாக்கியதில் பாகனும் அவரது உறவினரும் உயிரிழந்த நிலையில், யானை வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தது. கடந்த வாரத்தில் இருந்து யானை சாதாரண நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
யானை தினமும் கட்டப்பட்டுள்ள இடத்திலேயே குளிக்க வைக்கப்பட்டு பாகன் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது மருத்துவர்கள் ஆய்வு செய்து சென்றனர்.
இன்றைய தினம் மீண்டும் வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் யானையை பரிசோதித்தனர்... அவர்கள் வழங்கிய பழங்களை யானை உற்சாகமாக சாப்பிட்டது... இனி யாரையும் தாக்கமாட்டாயே என பாகன் கேட்க, தாக்க மாட்டேன் என்பதைப் போல் தலையாட்டியது... இந்நிலையில் யானை இயல்பு நிலையில் தான் உள்ளதாகவும், அதை தினமும் வழக்கம்போல் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லலாம் என்றும் பரிந்துரைத்த மருத்துவர்கள் முதற்கட்டமாக பக்தர்கள் குறைவாக உள்ள சமயங்களில் அழைத்துச் செல்வது நலம் என தெரிவித்தனர். தொடர்ந்து யானை தினமும் குளிக்கும் சரவண பொய்கையில் யானையை பராமரிக்க ஒரு குடில் அமைத்தால் யானை இயற்கை சூழலில் இருப்பதைப் போன்ற சூழல் ஏற்படும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்...