தேனியில் தாக்கிய டிஎஸ்பி?.சிறுவர்கள் காயம்.. பரபரப்பு காட்சி - கொந்தளித்த இந்து முன்னணியினர்
தேனி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, இந்து முன்னணியினரை டிஎஸ்பி தாக்கியதாக கூறி போராட்டம் நடத்தப்பட்டது. அல்லிநகரம் அருகே இந்து முன்னணியினர் சார்பாக ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வாகனத்தில் ஏராளமானோர் அமர்ந்திருந்ததால், அவர்களை கீழே இறங்குமாறு போலீசார் அறிவுறுத்தியதாக தெரிகிறது. எனினும், வாகனத்தில் இருந்தவர்கள் கீழே இறங்காததால், அவர்கள் மீது தேனி டிஎஸ்பி பார்த்திபன் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால், சிறுவர்கள் உள்ளிட்டோர் காயமடைந்ததாக கூறி இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.