மூன்று மாவட்டங்களை அதிர வைத்த ஒரு தலைவன்.. 6 சுள்ளான் கேங்க் - வாக்குமூலத்தை கேட்டு மிரண்ட போலீஸ்

Update: 2024-08-17 10:08 GMT

மூன்று மாவட்டங்களை அதிரச் செய்த கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

6 சிறார்கள் அவர்களது தலைவன் ஒருவன் ஆகியோர் சேர்ந்து ஓர் இரவில் செய்த சம்பவம் ஒட்டு மொத்த ஊர் மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.....

போலீஸ் விசாரணையில் அவர்கள் கடந்த மூன்று வருடமாக செய்த சம்பவங்களை எல்லாம் வாக்குமூலமாக அளிக்க போலீசாருக்கே ஷாக் அடித்து இருக்கிறது.....

யார் அவர்கள் ....?....அப்படி என்ன செய்தார்கள்.....

திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் ஒரே நாளில் 5 கோயில்களில் பூட்டு உடைக்கப்பட்டு ...அம்மனின் தங்க தாலி உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொது மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.

விசாரணையை கையில் எடுத்த போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய...சம்பந்தமே இல்லாமல்.. நள்ளிரவு இரண்டு மணிக்கு சைக்கிளில் சென்ற இரு சிறுவர்களும்...அவர்களை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த மூவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

பல்வேறு சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுவர்களின் தலைவனான ஆரணியைச் சேர்ந்த பாபாவையும் ....அவர் மூலமாக 6 சிறார்களையும் கைது செய்தனர்.

பகல் நேரங்களில் கோழிப்பண்ணையில் வேலை செய்யும் இவர்கள் கோயில்கள் மற்றும் ஆளிள்லா வீடுகளை நோட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த மூன்றாண்டுகளில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மாவட்டங்களில் சுமார் 500 சவரன் நகைகள் வரை கொள்ளையடித்து இருப்பதாக வாக்குமூலம் அளித்திருப்பது போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

நகைகளைக் கொள்ளையடித்து அதனை சேட்டு கடைகளில் விற்று..அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தாராளமாகச் செலவு செய்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களின் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணையை நடத்தி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்