``தண்ணீரில் விளக்கு ஏற்றிய பூசாரி'' எண்ணெய் போல் எரியும் அதிசயம்

Update: 2025-04-08 17:44 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள தட்டான்குட்டை பச்சை தண்ணீர் மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்றது. இதில் தண்ணீரில் விளக்கு எரியும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு முன் கோயில் தர்மகர்த்தாவிடம் பூசாரி விளக்குக்கு எண்ணெய் கேட்டதாகவும்,அவர் ஏளனமாக தண்ணீர் ஊற்றி பற்றவையுங்கள் என கூறியதாகவும் தெரிகிறது. பின்னர், பூசாரி அதிகாலையில் குளித்து, கிணற்றிலிருந்து நீரை எடுத்துச்சென்று விளக்கில் ஊற்றிய போது விளக்கு கொழுந்துவிட்டு எரிந்ததால் அந்த கோயில் பச்சதண்ணீர் மாரியம்மன் எனப் பெயர்பெற்றதாக ஐதீகம்.. இந்நிலையில் தற்போது பங்குனி மாத திருவிழாவில், தண்ணீரில் விளக்கு எரியும் அதிசய நிகழ்வு மற்றும் பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்