டாஸ்மாக் வழக்கு.. தமிழக அரசுக்கு ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம் - தீர்ப்பின் முழுவிவரம்
டாஸ்மாக் அலுவலகங்கள்ள அமலாக்கத்துறை நடத்துன சோதனைக்கு எதிரா தொடரப்பட்ட வழக்குல அதிரடி தீர்ப்பு வழங்குனது மூலமா தமிழக அரசுக்கு ஷாக் குடுத்துருக்கு சென்னை உயர்நீதிமன்றம். கடந்த மார்ச் மாசம் 6ஆம் தேதில இருந்து 8ஆம் தேதி வரைக்கும் சென்னைல இருக்கர டாஸ்மாக் தலைமை அலுவலகம்,டாஸ்மாக் குடோன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்கள்ள அமலாக்கத்துறை மேற்கொண்ட அதிரடி சோதனைல 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதா அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுச்சு.