இன்று இரவு திறக்கப் போகும் புது சுங்கச்சாவடி.. கோபத்தில் களத்தில் இறங்கிய மக்கள்

Update: 2024-11-13 02:03 GMT

திருப்பூர் மாவட்டம், அவிநாசி முதல் அவிநாசி பாளையம் வரை 32 கிலோ மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேலம்பட்டி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நீர்நிலையை ஆக்கிரமித்து இந்த சுங்கச்சாவடி கட்டப்பட்டுள்ளதாக கூறி, இரண்டு வருடங்களாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பத்து நாட்களுக்கு முன்பு சுங்கச்சாவடி திறக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து பொதுமக்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்பு முடிவெடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் சுங்கச்சாவடியை திறக்க உள்ளதா கவும், சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாகவும் வெளியான தகவலை அடுத்து, விவசாயிகள், பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்